1. தன் குடும்பத்தையே சரியாக கவனிக்காமல் பட்டினியில் விட்டு விட்டு, தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழிப்போம் என்று கூறுவது கேலிக்கூத்து.
2.தன் மனைவியை அவமான பட விட்டுவிட்டு பெண் உரிமையை பற்றி பேசுவது அதைக்காட்டிலும் பெரிய கூத்து.
பாரதி ஒரு அந்த கால சிதம்பரத்தில் ஒரு அப்புசாமி. இன்றைய கவிஞர்கள் பலர் அவரை தாண்டி வெகு தூரம் சென்று விட்டார்கள்.
2 comments:
உங்களுக்கும் பின்னூட்ட ஆசையா? வாழ்க வளர்க. :-)
தனியொருவனுக்கு உணவிலையெனில் என்று சொன்னது தன்னைப் பற்றியதாகவே இருக்கலாமே?
தன் மனைவியை எங்கு அவமானப் பட விட்டார் என்பதை விளக்குங்கள்.
பாரதியைப் புரிந்து கொள்வது என்பது எல்லாருக்கும் எளிதாகாது. உங்களுக்கும் புரியவில்லை என்றே தோன்றுகின்றது.
பாரதி குடும்பம் நடத்தப் பிறந்தவன் அல்லன். அவனுக்குத் திருமணம் தக்கதன்று. பொருத்தமும் அன்று. ஒரு கவிஞனும் கலைஞனும் சிறந்த குடும்பியாக இருப்பது மிகக்கடினம். நிறைய எடுத்துக்காட்டுகள் சொல்லலாம்.
சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமியோடா பாரதியை ஒப்பிடுவது? அடடா! தமிழுக்கு வந்த சோதனை?
பாலச்சந்தர், ஒரு தனிப்பட்ட கேள்வி...நீங்கள் பூனாவில் வளர்ந்தவரா? (இதற்கும் பதிவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.)
Post a Comment