ரஜினி ஒரு ரூபாய் வைத்து கொண்டு கோடி கணக்கில் சம்பாதிக்கிறாராம். ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கினார் ஜெயலலிதா முன்னர் முதலமைச்சராக இருந்த போது. அவருக்கு கட்டுபிடியாகும். மற்றவர்களுக்கு முடியுமா?.
இறுதியில் ரஜினி சம்பாதித்த அனைத்தையும் மக்களுக்கு எழுதிவைத்து விட்டு ஒரு ரூபாய் மட்டுமே எடுத்து கொள்கிறார். இது தான் கதை என்று குமுதம் சொல்கிறது.
நான் எழுதிய கதை எவ்வளவோ மேல் என்றே எனக்கு தோன்றுகிறது.
தவமாய் தவமிருந்து , ஆட்டோகிராப் போன்ற படங்களை வெற்றி கொள்ள செய்த மக்கள் இதையும் ஒட வைப்பார்கள்.
7 comments:
அவசரப் படாதீர் நண்பரே,
பத்திரிக்கைகளில் எப்படி வேண்டுமானாலும் எழுதுவார்கள். திரைப்படம் வெளிவந்த பிறகுதான் தெரியும் உண்மையான கதை என்னவென்று.
தவிர இயக்குனர் சங்கரும் ரஜினியை வைத்து இயாக்கும் படத்தில் இப்படியொரு சாதாரண கதையை தேர்ந்தெடுக்க மாட்டார்.
சிபி அவர்களே,
நான் கூறியது குமுதத்தில் வந்த கதையை பற்றி.
ஷங்கர் பொதுவாகவே கதையை விட திரைகதை , ஜிகினா வேலை செய்வது , காட்சி அமைப்பு போன்றவற்றிலேயே மிக கவனம் செலுத்துகிறார். பாபா தோல்வி அடைந்ததால் மட்டுமே ரஜினி நல்ல கதை தேடுகிறார்.
சிவாஜி வெற்றி படமாக அமையலாம். ஆனால் நல்ல படமாக இருக்குமா என்பது சந்தேகமே...
ரஜினி சில காலமாக நல்ல கதைகளைத் தேர்ந்தெடுப்பதில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அவர் தனது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தருவதை ஒருபோதும் விரும்புவதில்லை.
சமீபத்திய பாபா கூட வசூல் ரீதியாக தோல்விப்படம் அல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நண்பரே.
சிவாஜி ஒரு நல்ல கதையுடன் கூடிய மிகப் பெறிய வெற்றிப்படமாக அமையும் என்வது திண்ணம்.
அன்புள்ள நாமக்கல் சிபி அவர்களே,
இந்த படம் வெற்றி அடையும் என்பது என்னுடைய கணிப்பு.
இரசிகர்களுக்கு பாபா ஏமாற்றமே. நல்ல கதை என்பது ஒரு கதை. ரஜினியிடமோ அல்லது ஷங்கரிடமோ அதை எதிர்பார்ப்பது அது ஏமாற்றத்தில் மட்டுமே முடியும்.
நிஜ வாழ்க்கை பிரச்சினைகள் + சுகமான கற்பனையான தீர்வுகள் இது தான் ஷங்கரின் வெற்றி சமன்பாடு. கற்பனையான அசாதாரணமண பலமிக்க கதாநாயகன் + சாதாரண வில்லன்களை தோற்கடிப்பது இது ரஜினியின் சமன்பாடு. சிவாஜியின் கதை இரண்ட்டையும் இணைக்கும் ஒரு திரைப்படமாகவே அமையும். அதில் "முள்ளும் மலருமாக " இருக்காது இந்தியன்+ அன்னியன்+ பாபா ஆக இருக்கும்.
அன்புள்ள் நாமக்கல் சிபி அவர்களெ , இந்த கணக்கு தப்பு a,b
வைத்து ஏமாற்றுகிறீர்கள். . a-b என்பது 0 ஆகி விடுகிறது.
0 ஆல் எதனையும் வகுக்க கூடாது. எண்களை வைத்து உங்கள் கணக்கை நான் போடுகிறேன்.
1 * 0 = 0
101 * 0 =0
எனவே
1* 0 = 101 * 0
இரண்டு பக்கமும் 0 யாத்தால் வகுக்க ( இது செய்ய கூடாது. ஆனால் இதை தான் நீங்கள் செய்திருக்கிறீர்கள்)
1= 101
போங்க சிபி... இது ஒரு சாதாரணமான டிரிக்.
பதிலாக எண்களை பயன்படுத்தினால் உங்கள் சாயம் வெளுத்து விடுகிறது.
தப்பா போட்டால் விடையும் தப்பாகக் கிடைக்கும் என்பதைக் காட்டத்தான் அந்த சமன்பாடுகளைப் பயன்படுத்தியிரிக்கிறேன். இதில் வெளுப்பதற்கு சாயம் எல்லாம் ஒன்றும் இல்லை நண்பரே.
ரஜினியைப் பொறுத்தவரை ரசிகர்களையும் அதே சமயம் தயாரிப்பாளரையும், விநியோகஸ்தர்களையும் ஒரு சேர திருப்தி படுத்த வேண்டிய பொறுப்பு இருக்கிறது. கதை மற்றும் ஜிகினா வேலைகளைப் பற்றி அவர் கவலை படத்தேவையில்லை. இயக்குனர் சொல்வதை செய்துவிட்டு போகிறார். அவ்வளவே.
Post a Comment