Monday, January 16, 2006

பதவியை இராஜினாமா செய்வது எப்படி.

பா.ம.க தலைவர் ஒவ்வோரு தேர்தலுக்கும் கூட்டணி விட்டு கூட்டணி தாவுவார். இந்த முறை அவர் தாவவில்லை. (ஏனெனில் மகன் மத்திய அமைச்சராக தொடர விரும்புகிறார்.) தமிழத்தில் நல்ல மழை பெய்தற்கு இது கூட காரணமாக இருக்க கூடும்.
இந்த முறை அவர் தாவாத குறையை அவர் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றியிறுக்கிறார்கள். இன்னும் 4 அல்லது 6 மாதங்களே இருக்கும் போது அவர்கள் தாவியிருக்கிறார்கள். என்ன காரணம் ?. அதற்கா பஞ்சம்? தாவுதல் ஸ்பெஷலிஷ்ட் கட்சியில் இருந்த அவர்களுக்கு தாவுவதற்கு காரணம் கண்டு பிடிக்க முடியாதா?
காரணம் கூறுகிறார்கள் பாருங்கள். பா.ம.க வில் தாழ்த்த பட்டவர்களுக்கு முக்கியத்துவம் இல்லையாம். அவர்கள் புறக்கணிக்க படுகிறார்களாம். அப்படி பார்த்தால் இவர்களுக்கு இந்த பதவி எப்படி கிடைத்தது? புறக்கணிப்பது என்றால் பதவி கொடுக்காமல் அல்லவா புறக்கணிக்கத்திறுக்க வேண்டும். ஏன் சட்ட மன்ற உறுப்பினர் பதவி கொடுத்து புறக்கணிக்க வேன்டும்?இதற்கு மேல் இந்த காரணத்தை ஆராய்வது வீண்.
பதவி இன்னும் கொஞ்ச நாளில் அதுவாகவே காலி ஆகி விடும் என்ற நிலையில் இவர்கள் கட்சி தாவியிருக்கிறார்கள். இராசினாமா செய்து விட்டோம் என்று பெருமை வேறு.
இவர்கள் இராஜினாமா செய்யவிட்டால் பதவி கட்சி தாவல் தடை சட்ட படி காலியாகி விடும். அது தான் இவர்கள் இராஜினமா செய்ததற்கு காரணம்.
பதவியை எப்படி இராஜினாமா செய்ய வேண்டும் என்று இவர்கள் எடுத்து காட்டியிருக்கிறார்கள்...
இராமதாசு சத்தியத்தை கடைப்பிடிப்பது எப்படி என்று காட்டினார். மகனுக்கு வாய்ப்பு கிடைக்கும் வரை சத்தியத்தை கடைபிடித்தவர் , வாய்ப்பு வந்தவுடன் சத்தியத்தை தாரைவார்த்தார். அது போல இவர்கள் பதவியை இராஜினாமா செய்வது எப்படி என்று காட்டியிருக்கிறார்கள்.


இன்னமும் தேர்தல் அறிவிப்பே வரவில்லை. அதற்குள் இப்படி... இன்னும் என்ன காட்சிகள் காத்திருக்கின்றனவோ?
யார் கண்டார், இராமதாசு கூட தாவ மாட்டார் என்று சொல்ல முடியாது(!!!!!!!!!)

3 comments:

நாமக்கல் சிபி said...

இன்னும் தேர்தல் அறிவிப்பு வரணும், கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடக்கனும். அதுக்குள்ள தலைவரைப் பத்தி ஏதும் தவறான அபிப்ராயத்திற்கு வந்துடாதீங்க!

பிரதீப் said...

இத்தனை கூத்திலயும் இப்ப ராமதாஸ் அதிமுக கூட்டணிக்குப் போறாருன்னு வைங்க, அப்ப இருக்கு இவங்களுக்கு ஆப்பு!

முந்தி திருநாவுக்கு அம்மா புதுக்கோட்டையில வச்ச ஆப்பு நினைவிருக்கா? அப்ப பிஜேபி கூசாம அவரைக் காவு குடுத்தது நினைவிருக்கா? ஜெ.வுக்குக் காவு வாங்கவும் தெரியும், காவு குடுக்கவும் தெரியும்.

என்னமோ இதையும் சகஜம்னு சொல்லி வாழ்ந்துக்கிட்டு இருக்கோமே...

மாயவரத்தான் said...

//இந்த முறை அவர் தாவவில்லை. தமிழத்தில் நல்ல மழை பெய்தற்கு இது கூட காரணமாக இருக்க கூடும்//

:)