பாசக்கிளிகள் படம் ஆதி,பரமசிவன் ஆகிய படங்களை விட அதிக பரபரப்புடன் ஒடுகிறது. சந்திரமுகி பட ரெக்கார்டை ஒரே வாரத்தில் முறியடிக்கிறது. கூட்டணியிலிருந்து மற்ற கட்சிகள் , தி.மு.க. எத்தனை இடங்கள் கொடுத்தாலும் மறுபேச்சு பேசாமல் வாங்கி கொள்கின்றன. தயாநிதிமாறனை அகில இந்திய அளவில் அனைத்து பத்திரிக்கைகளும் பாராட்டுகின்றன. பில்கேட்ஸ் கலைஞரின் கொள்கைகளால் கவர பட்டு தி.மு.க. வில் உறுப்பினராக சேருகிறார். தேர்தலில் தி.மு.க. 150 இடங்களில் போட்டியிட்டு 150 லில் வெற்றி பெறுகின்றது.ஆனால் கூட்டணி கட்சிகள் அனைத்தும் மீதி இடங்களில் தோல்வி அடைகின்றன. ஆனால் அ.தி.மு.க வும் அனைத்து இடங்களையும் தோல்வி அடைகிறது. 84 சுயேட்சைகள் வெற்றி பெறுகிறார்கள். அவர்களும் தி.மு.க. வில் இணைகிறார்கள்.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிறார். அதை தொடர்ந்து அனைத்து தமிழக கட்சிகளும் கலைக்க படுகின்றன. அனைத்து கட்சிதலைவர்களும் தி.மு.க. வில் இணைகிறார்கள்.
5 comments:
இந்த பதிவை எழுதியவருக்கு வந்த கனவு வக்கிர புத்தியின் வினை என வைத்துக்கொள்ளலாம?
ஜெயலலிதாவோட கனவை விட கலைஞருக்கு வந்த கனவு பயங்கரமா இருக்கே...
அனானிமஸ்...இதில் வக்கிரபுத்தி எங்கிருந்து வந்தது!
ஆகா... தலைவரை நிம்மதியாக் கனவுக் கூட காண விட மாட்டீங்களா?? பாதிக் கனவைத் தான் சொல்லியிருக்கிய மீதி.....???
நேரம் கிடைச்சா.. இதைப் பாருங்க
நேரம் கிடைச்சா.. இதைப் பாருங்க
http://chennaicutchery.blogspot.com/2006/01/blog-post_12.html
கலைஞர் ஏற்கனவே இல்லாத தலைமுடியைப் பிச்சிட்டு இருக்கார், கூட்டணிக் கட்சிகளைச் சமாளிக்கிறதுல... இதில நீங்க எழுதி இருக்குற மாதிரி கனவு வந்துட்டாலும்... அதிலயும் பில்கேட்ஸூ சேந்தாருன்னு வைங்களேன்... சூப்பரப்பு
Post a Comment