என் ப்லொக்கிற்கு வருகை தந்ததற்கு நன்றி. ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு என்பது நானும் என் நண்பர்களும் நடத்தி வந்த மாத பத்திரிக்கை. இப்பொது வெப் வடிவம் பெற்றுள்ளது.
Sunday, January 15, 2006
ஜெயலலிதா கனவு காண்கிறார்.
தி.மு.க. கூட்டணி வேட்பாளர் கிடைக்காமல் திண்டாடுகிறது. சீட் கொடுக்க கலைஞர் தயாராக இருந்தாலும் போட்டியிடுவதற்கு மக்கள் தயாராக இல்லை. கலைஞர், ஸ்டாலின் மற்றும் அன்பழகன் மட்டுமே போட்டியிடுகின்றனர். டெபாசிட் கூட கிடைக்காது என்ற பயத்தினால் மற்ற கட்சிகள் போட்டியிலுருந்து ஒதுங்குகின்றன. 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க போட்டியின்றி வெற்றி பெறுகிறது.ஜெயலலிதா வெற்றி அடைந்த அடுத்த் நிமிடமே , அரசு ஊழியர்கள் அனைவரும் கைது செய்ய படுகிறார்கள். பர்னாலா பஞ்சாப் ஒடிவிடுகிறார். சசிகலா வீட்டு சமையகாரர் முன்னிலையில் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அறிவில்லாதவர்களுக்கு மட்டுமே மந்திரி பதவி என்று ஜெயலலிதா அறிவிக்கிறார். எனக்கு அறிவில்லை என்று கூறி அனைவரும் மந்திரி பதவியை பெற்று கொள்கிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
அதிபயங்கர கனவாயிருக்குதே.......
அப்படியே புல்லரிச்சுருச்சு.
அதிலயும் அந்தக் கடைசி வரி இருக்கு பாருங்க... கல்வெட்டில பொறிச்சு வைக்கணும்.
// எனக்கு அறிவில்லை என்று கூறி அனைவரும் மந்திரி பதவியை பெற்று கொள்கிறார்கள்.//
ஒரு சிறிய திருத்தம்.
எனக்கு அறிவில்லை என்று ஒப்புக்கொண்டு அனைவரும் மந்திரி பதவியை பெற்று கொள்கிறார்கள்
Post a Comment