கனடாவில் மான்ட்ரியால் மிக கடுமையான குளிரான ஊர். நீங்கள் இங்கு மிக சிரமபட நேரும் என்று பலரும் பயமுறுத்தினார்கள். ஆனால் அந்த மாதிரி எந்த கடினமும் நான் உணரவில்லை. சிரமபட வில்லை. ஆனாலும் ஸ்வெட்டர் போட்டு கொண்டு, கனமாக காலணி அணிந்து கொண்டு ஊர் சுத்துவது சுகமானதாகவே உள்ளது.
நம்மூர் சாப்பாடு என்றால் வட இந்திய உணவங்கள் மட்டுமே அதிகம். நான் அமெரிக்காவில் இருந்த போதும் கவனித்த விஷயங்களில் ஒன்று. வட இந்திய உணவகங்கள் மட்டுமே அதிகம். தென் இந்திய உணவு வகைகள் அங்கு கிடைப்பினும் நன்றாக இல்லை. ஏன் தென் இந்திய உணவகங்கள் அதிகம் காணபடுவது இல்லை. இத்தனைக்கும் தென் இந்தியர்கள் நிறையவே அங்கு உண்டு.
ஒரு வேளை தென் இந்தியர்களுக்கு அடுத்த நாட்டில் தொழில் துவங்கும் எண்ணம் குறைவோ? நல்ல தென் இந்திய உணவகம் ஒன்று ஆரம்பிக்க பட்டால் அது மிக பெரிய வெற்றி அடையும் என்பதில் சந்தேகம் இல்லை.
காபி, டீ, இட்லி, தோசை இருந்தால் மட்டுமே உள்ள கடையாக இருந்தாலும் நல்ல வெற்றி காணும். ஒரு குளிர் தேசத்தில் நல்ல டீ அல்லது காபி சாப்பிட முடியவில்லை என்பது ஒரு கடுப்பு. ஒரு வேளை நாடு திரும்பிய உடன் ரொம்ப மாறுதலாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

No comments:
Post a Comment