Saturday, January 28, 2006

பணத்தை திருப்பி கேட்பது முறையா?

ஆதி படம் எதிர்பார்த்த அளவு ஒடவில்லை என்பதினால், விஜய் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் முற்றுகை இடுவதாக ஜூனியர் விகடன் தெரிவிக்கிறது.
முதலில் நான் நடிகர்களுக்கு வக்காலத்து வாங்குவதில்லை. என்னுடைய மற்ற பதிவுகளை பார்த்தாலே இது தெளிவாக தெரியும். ஆனால் இந்த விஷயத்தில் தவறு விநியோகஸ்தர்கள் மீது இருப்பதாகவே நான் கருதுகிறேன். முதலில் இந்த படத்தில் லாபம் வந்திருந்தால் இதை அவர்கள் விஜய்க்கு பங்கு கொடுத்திருப்பார்களா? நட்டம் வரும் போது மட்டும் விஜய் பணம் திருப்பி கொடுக்க வேண்டுமா? போட்டி போட்டு கொண்டு விலையை ஏற்றி விடுவது இவர்கள் தானே. எந்த படத்தையும் அது விநியோகஸ்தர்களுக்கு காட்ட பட்ட பின்னரே தான் விலை நிர்ணயம் செய்ய பட வேண்டும் என வழிமுறை கொண்டு வர வேண்டியது தானே..
சினிமாவை பொறுத்த வரையில் இலாபம் அதிக அளவில் தனக்கு வர வேண்டும் ஆனால் நஷ்டம் வந்தால் தான் மட்டும் அதில் தப்பி விட வேண்டும் என்கிற ரீதியில் இவர்கள் செயல் படுகிறார்கள். அண்டை மாநிலங்களான கேரளாவிலோ நடிகர்களின் சம்பளம் மிகவும் கம்மி. ஆந்திராவிலோ சம்பளம் எவ்வளவாக இருப்பினும் அட்வான்ஸாக வழங்க படுவது 1 லட்சம் மட்டுமே. இந்த மாதிரியான கட்டுபாடுகள் சினிமா தொழிலை மேன்படுத்தும்.
அதை விட்டு விட்டு , என்ன ஏது என்று தெரியாமல் படத்தை வாங்குவது, அப்புறம் போய் பணத்தை கேட்பது(கிடைக்காது என்பது வேறு விஷயம்) என்பதெல்லாம் இவர்கள் இன்னமும் தங்கள் தொழிலின் வெற்றி இரகசியத்தை கற்கவில்லை என்பதை காட்டுகிறது.

2 comments:

பெத்தராயுடு said...

ஜூ.வி கட்டுரை சொல்வது, ஆதி படம் திரையிடுவது ஓரிரு நாள் தள்ளிப்போனதால் ஏற்பட்ட நட்டத்தை ஈடு கட்டவேண்டுமென்பதே. மற்றபடி, உங்கள் கருத்து எனக்கு உடன்பாடானதே.

வசந்தன்(Vasanthan) said...

இதைத் தொடக்கி வைத்தது ரசனிதான் என்று நினைக்கிறேன்.
ஆனால் ஒன்றுமட்டும் உறுதி. நடிகர்கள் விரும்பித்தான் இப்பணத்தைக் கொடுக்கிறார்கள், அடுத்த படத்தின் வெற்றிக்காக.