Tuesday, January 17, 2006

டோண்டு ராகவன் மற்றும் என்னார் அவர்களுக்கு ஒரு கடிதம்.

முதலில் நான் எழுதிய பதிவு.

http://bunksparty.blogspot.com/2006/01/blog-post_113665559232878088.html

அதற்கு டோன்டு என்னார் அவர்களுடைய பதில்கள்.

http://www.blogger.com/comment.g?blogID=9191030&postID=113665559232878088


தனிப்பட்ட முறையில் நான் டோன்டு அவர்கள் மீது மிக்க மரியாதை வைத்துள்ளேன். சிறந்த வலைபதிவர்கள் என்றைய என்னுடைய பதிவில் அவருடைய பேரும் உண்டு.

இப்போது குலகல்வி திட்டம் பற்றி என்னுடைய பதில்.
உண்மையில் பிள்ளைகள் அதுவும் ஏழை பிள்ளைகள்,பல ஜாதியிலிருந்தும் உள்ள ஏழை பிள்ளைகள் பள்ளி கூடம் வரவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?. அதற்கு எத்தனையோ வழிகள் உண்டு.

அதனில் ஒன்று தான் குழந்தைகளுக்கு சாப்பாடு போடுவது. இதைதான் காமராஜர் செய்தார்.(மதிய உணவு திட்டம்). பின்னர் எம்.ஜி.ஆர் விரிவாக்கினார்(சத்துணவு திட்டம்). இந்த திட்டங்கள் பெரிய வெற்றி பெற்றன என்பதும் நிறைய பிள்ளைகள் பயன்பெற்றனர் என்பதும் வரலாறு.


இது போன்று ஒன்றும் செய்யாமல் எதற்கு ஜாதி அடிப்படையில் தொழில் கல்வி கொண்டு வர வேண்டும்? இதில் என்னார் வேறு சொல்கிறார். டாக்டர் பையன் டாக்டராகிறார், வக்கீல் பையன் வக்கீலாக இருப்பது என்று எடுத்துகாட்டு வேறு. என்ன ஒரு முட்டாள் தனமான கருத்து. டாக்டர் பையன் டாக்டராக இருப்பது வெற்றியே... வக்கீல் பையன் வக்கீலாக இருப்பது வெற்றியே.
ஆனால் செருப்பு தைப்பவர் பையன் செருப்பு தைப்பனாகவே இருப்பது வெற்றியா?.


மேலும் டாக்டர் பையன் டாக்டராக வருவது குல தொழிலாக அல்ல. ஏனெனில் எல்லா ஜாதியிலும் டாக்டர்கள் இருக்கிறார்கள். அதை குடும்பத் தொழில் என்று கூறுங்கள்.

ஆக்க பூர்வமான எடுத்த காமராஜரையோ, எம்.ஜி.ஆரையோ யாரும் குறை கூறி எழுதுவதில்லை என்றும் இராஜாஜி இதை செய்திருந்தால் அவரையும் சமுகம் பாராட்டியிருக்கும் என்பதிலும் எனக்கு சந்தேகமில்லை.


14 comments:

dondu(#11168674346665545885) said...

பாலசந்தர் அவர்களே,

"இது போன்று ஒன்றும் செய்யாமல் எதற்கு ஜாதி அடிப்படையில் தொழில் கல்வி கொண்டு வர வேண்டும்?"

மறுபடியும் தவறாக எழுதுகிறீர்கள். 1953-ல் தொழில் கல்வியை யாரும் கொண்டு வரவில்லை. அதற்கான அடிப்படை வசதிகள் அப்போதைய அரசிடம் கிடையவே கிடையாது என்பதுதான் நிஜம். நடந்தது என்னவென்றால் கிராமப் புறங்களில் பலர் தங்கள் பிள்ளைகளை தங்கள் தொழிலிலேயே போட்டார்கள். படிக்க பள்ளிக்கு அனுப்பவேயில்லை. அவர்களிடம்தான் குறைந்த பட்சம் ஒரு வேளையாவது பள்ளிக்கு அனுப்புங்கள் என்று அரசு கூறியது. வேண்டுமானால் இன்னொரு வேளை அவர்கள் தொழிலில் ஈடுபடட்டும் என்று கூறியது. இத்தகையத் தொழில் கல்வி அரசின் பாடத் திட்டத்தில் இல்லவே இல்லை. அப்படியே கற்றுக் கொள்ளாமல் போனாலும் அதற்காக ஒரு விளைவும் கிடையாது.

ஆக நீங்கள் பைனாக்குலரின் தவறான முனையிலிருந்து பார்க்கிறீர்கள்.

இப்போது என்ன நடக்கிறது? தகப்பன் தச்சன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவன் உழைத்துக் கொண்டே இருப்பான். பிள்ளை ஏட்டுப் படிப்பு படித்து வெள்ளையும் சொள்ளையுமான எழுத்தர் வேலை தேடுவான். கிடைக்கவில்லை என்றால் ஊர் சுற்றுவான். கையில் தொழில் இருந்தால், படிப்பு கொடுத்த அறிவை வைத்து வியாபாரத்தை விஸ்தரிக்கலாம் அல்லவா.

இப்பின்னூட்டமும் என்னுடைய இதற்கானத் தனிப்பதிவில் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

பாலசந்தர் கணேசன். said...

உயர்திரு டோண்டு அவர்களே,
கைவசம் தொழில் இருந்தால் பிழைக்கலாம். உண்மை ஒத்து கொள்கிறேன். அது எந்த தொழிலாகவும் இருக்கலாம். கை தொழில் ஒன்றை கற்று கொள் என்று தான் எல்லாரும் கூறியிருக்கிறார்கள். ஜாதி தொழிலை கற்றுக் கொள் என்று யாரும் கூறவில்லை.

நீங்கள் அனைவரும் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்கிறிர்கள். தொழில் கல்வி கற்பதையோ அல்லது கட்டாயம் ஆக்கியிருந்தாலோ அனைவரும் சம்மதித்திருப்பார்கள். ஆனால் ஏன் குலகல்வியாக இருக்க வேண்டும்? தச்சர் வீட்டு பையன் தச்சு வேலை படித்தால் தச்சு வேலை தான் செய்வான். தொழில் நுட்ப கல்வி படித்தால், தொழில் நுட்ப வேலை செய்வான். அதுவல்லவா முன்னேற்றம். ஒரு பையன் 20 வருடம் படித்து மீண்டும் கஷ்டபட்டு படிக்கவைத்த தந்தை செய்கின்ற வேலையை மீண்டும் செய்வான் அப்போது படிப்பு என்ன முன்னேற்றம் கொடுக்கிறது. படிப்பு ஏட்டு படிப்பு என்றால் அதற்கு தீர்வு தொழில் கல்வி . குல கல்வி திட்டமல்ல.

இவ்வள்வு தூரம் கஷ்டபட்டு இராஜாஜியை நியாயபடுத்தும் நீங்கள், பிள்ளைகளை பள்ளிக்கு வெற்றிகரமாக கூட்டி வந்த காமராசரை பற்றி இன்னும் பாராட்டதது ஏன்?

குல கல்வி என்பது நீங்கள் சொல்வது போல வேலை கிடைக்காதவர்களை காப்பற்றும் திட்டமல்ல.
இது "அவர்களை" "அவர்களாகவே" வைத்திருக்கும் திட்டம். ஏனனில் தலைமுறை தலைமுறையாக படித்த பின்னரும் முன்னேற்றம் இல்லாமல் அதே வேலையை செய்வது "குல" கல்வி திட்டத்தின் வெற்றியாக இருக்கலாம். அது சமுகத்தின் தாழ்த்த பட்டவர்களின் தோல்வியாகவே அமையும்.

இராஜாஜி தொழில்கல்வி திட்டம் கொண்டு வந்திருந்தால் நானும் பாராட்டியிருப்பேன் என்பதை நீங்கள் உணர வேண்டும். நான் நெருப்பானவன் என்பதை என் பதிவுகள் நிருபீக்கின்றன. எனக்கு ஜாதி, மதம்,மொழி எல்லாவற்றையும் தாண்டி சமுக உணர்வோடு சிந்திப்பவன் நான். என் எழுத்துக்கள்
இரசிக்க தக்கதா என்பது வாசகனின் கருத்து. ஆனால் எந்த தவறான முனையும் இல்லை.

"தொழில் கல்வி அரசின் பாடத் திட்டத்தில் இல்லவே இல்லை."
" அப்படியே கற்றுக் கொள்ளாமல் போனாலும் அதற்காக ஒரு விளைவும் கிடையாது. "

இரண்டு வரிகளுமே முரண்படுகின்றனவே. முதலில் பாடத்திட்டம் இல்லை என்கிறீர்கள். பின்னர் கற்று கொள்ளாவிட்டால் ஒரு விளைவும் இல்லை என்கிறீர்கள்... அப்போது பாடத் திட்டதில் சிபாரிசு செய்ய பட்டிருக்கிறது என்று தானே அர்த்தம்.
மற்ற படி நான் பெரிதும் மதிக்கும் நீங்கள் என்னுடைய ப்லாகிற்கு வந்து விமர்சித்தற்கு நன்றி. நான் பெரிதும் விரும்புவது மதிப்பது உங்கள் எழுத்துக்களை. இது என்னுடைய 100 வது பதிவு.

100 வது பதிவுக்கு உங்கள் பின்னோட்டம் பெற்றது எனக்கு வாழ்த்துக்கள் பெற்றது போல் உள்ளது.
என்ன்ருடௌய மற்ற பதிவுகள் பற்றியும் கருத்து கூறவும்.

dondu(#11168674346665545885) said...

மேலே புகைப்படம் இல்லாத என் பெயரில் உள்ள பதிவு போலி டோண்டு அனுப்பியது.

"தொழில் கல்வி கற்பதையோ அல்லது கட்டாயம் ஆக்கியிருந்தாலோ அனைவரும் சம்மதித்திருப்பார்கள். ஆனால் ஏன் குலகல்வியாக இருக்க வேண்டும்? தச்சர் வீட்டு பையன் தச்சு வேலை படித்தால் தச்சு வேலை தான் செய்வான். தொழில் நுட்ப கல்வி படித்தால், தொழில் நுட்ப வேலை செய்வான். அதுவல்லவா முன்னேற்றம். ஒரு பையன் 20 வருடம் படித்து மீண்டும் கஷ்டபட்டு படிக்கவைத்த தந்தை செய்கின்ற வேலையை மீண்டும் செய்வான் அப்போது படிப்பு என்ன முன்னேற்றம் கொடுக்கிறது. படிப்பு ஏட்டு படிப்பு என்றால் அதற்கு தீர்வு தொழில் கல்வி . குல கல்வி திட்டமல்ல."
மறுபடி சொல்ல முயற்சிக்கிறேன். அப்போதைய நிதிநிலையில் (1952-54) அரசுசார் தொழிற்கல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்போதைய வறுமை பற்றி உங்களுக்கு ஒரு ஐடியாவும் இல்லை.

ராஜாஜி அவர்கள் முதல்வராக இருந்தது வெறும் இரண்டு வருடங்கள். அதுவும் கம்யூனிஸ்டுகள் பிடியிலிருந்து தமிழகத்தைக் காப்பாற்ற அவர் எல்லோரும் (காமராஜ் உட்பட) கேட்டுக் கொண்டதற்கேற்ப முதல்வரானார். இந்த இரண்டு வருடங்கள் ரோல்லர் கோஸ்டரில் போவதைப் போல நிகழ்ச்சிகள் நடந்தன. வந்த காரியம் முடிந்து காங்கிரஸ் அரசு நிலைபெற்றதும் அவர் விலகிச் சென்றார். அந்த குறைந்த காலக் கட்டத்திலேயே பல அற்புதங்கள் நிகழ்த்தினார் அந்தக் கிழவர்.

அப்போது அதை ஏன் செய்யவில்லை, இதை ஏன் செய்யவில்லை என்று இப்போது பின் நோக்குப் பார்வையில் கேள்விகள் கேட்பது சுலபம்.

இப்பின்னூட்டமும் என்னுடைய இதற்கானத் தனிப்பதிவில் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

தகப்பன் தச்சன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவன் உழைத்துக் கொண்டே இருப்பான். பிள்ளை ஏட்டுப் படிப்பு படித்து வெள்ளையும் சொள்ளையுமான எழுத்தர் வேலை தேடுவான். கிடைக்கவில்லை என்றால் ஊர் சுற்றுவான். கையில் தொழில் இருந்தால், படிப்பு கொடுத்த அறிவை வைத்து வியாபாரத்தை விஸ்தரிக்கலாம் அல்லவா.



ஆம். செருப்பு தைப்பவன் மகன் வெள்ளையும் சொள்ளையுமா வேலை தேடாமல்
செருப்பு தைத்து பிழைக்கலாம் அல்லவா?

அவனுக்கு வேலை கிடைக்காது, யாரும் கொடுக்க மாட்டார்கள். வேலையில்
ரிசர்வேஷன் கூடாது. ரெகமந்தேசன் முறையில் சிலருக்கு மட்டும் வேலை
கிடைக்கும். இனி அவர்கள் செருப்பு தைக்க எந்த தடையும் இல்லை.

இவர்கள் எல்லாம் இந்த் நாட்டின் சிந்தனை சிற்பிகள்.
இந்த நாடு உருப்படாததுக்கே உயர் பதவிகளில் இப்பேற்பட்ட
சிந்தனை சிற்பிகள் இருப்பதுதான் காரணம்.

தொழில்கல்விக்கு பணம் இல்லாத நாட்டில்தான் தங்க அணிகளும், தங்க வாசலும், விமானமும்,
தங்க வைர கிரீடங்களாக கோயில்கள் ஜொலிக்கின்றன.

G.Ragavan said...

குலக்கல்வி முறை என்பது மிக அபாயகரமான யோசனை. படிக்கின்ற எந்தப் படிப்பும் போக சொந்தமாக ஒரு தொழில் தெரிந்திருப்பது நல்லதே. ஆனால் அது கண்டிப்பாக தந்தை செய்யும் தொழிலாகவோ குலத்தொழில் என்றோ இருக்க வேண்டியதில்லை.

அப்பன் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க பையன் வெள்ளையும் சொள்ளையுமாக சுற்றிக் கொண்டிருந்தால் அது வளர்ப்புக் குற்றம். கற்பிக்கப்பட்ட கல்வியில் குற்றம். அதைக் குலத்தொழிலோடு சேர்த்துக் கூறுவது முறையன்று.

பாலசந்தர் கணேசன். said...

எனது மதிப்பிற்குறிய டோண்டு அவர்களே!

இன்னோரு "பாலசந்தர் கணேசன்" இங்கே வந்து பின்னோட்டம் இட்டு சென்றுள்ளார். மற்றுமோரு போலி. அதை நான் நீக்கி விட்டேன்..

உண்மையான பாலசந்தர் கணேசன்.

மகேஸ் said...

குலக்கல்வித் திட்டம் என்பது ஒரு கத்தி மேல் நடக்கும் விசயம். அதை முறையாக ஒருவன் பயன்படுத்திக் கொண்டால், அதாவது நன்றாகவும் படித்து, நன்றாகவும் தொழிலும் கற்றுக்கொண்டால் பயன்தரும். படிக்காமல் தொழிலை மற்றும் கற்றுக் கொண்டு சுயமுயற்சி இல்லையெனில் திட்டம் தோல்வி(அந்த மாணவனைப் பொறுத்தவரை). சுயமுயற்சியுடன் தொழிலை முன்னேற்றினால் அப்போது திட்டம் வெற்றி. படிக்கவும் செய்யாமல் தொழிலும் கற்றுக் கொள்ளாமல் ஊர் சுற்றினால் தோல்வி.
எனவே இந்த விசயத்தில் வெற்றி தோல்வி என்பது பயனாளிகளின் கையில்.

dondu(#11168674346665545885) said...

"இன்னோரு "பாலசந்தர் கணேசன்" இங்கே வந்து பின்னோட்டம் இட்டு சென்றுள்ளார். மற்றுமோரு போலி. அதை நான் நீக்கி விட்டேன்.."

சந்தோஷம். மற்றொரு போலி எல்லாம் இல்லை. அதுவும் போலி டொண்டுவே. அது சரி என்பெயரிலும் அதே போலி (போட்டோ இல்லாமல்) பின்னூட்டமிட்டதை நான் சுட்டிக்காட்டியும் அதை ஏன் நீக்காமல் வைத்திருக்க வேண்டும்? இவ்வளவு வெளிப்படையான விஷயத்தை உங்களுக்குப் புரியவைக்கவே எனக்கு தாவு தீர்ந்து போகிறதே, உங்களுக்கெல்லாம் ராஜாஜி அவர்களின் கல்வி முறையை விளக்கி நான் என்ன கூற முடியும்?

இப்பின்னூட்டமும் என்னுடைய இதற்கானத் தனிப்பதிவில் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

பாலசந்தர் கணேசன். said...

போலி டோண்டுவை பற்றி எல்லாருக்கும் தெரியும் என்பதால் சற்றே கவனகுறைவாக இருந்து விட்டேன்.
இப்போது அவை அனைத்தையும் நீக்கி விட்டேன்.

காலதாமததிற்கு மன்னிக்கவும்.

போலியான டோன்டு யார். அவருடைய நோக்கம் என்ன? இது போல மற்றும் பலர் பெயரில் அவர் உலா வருகிறார். என் பெயரில் கூட ஆரம்பித்து இருக்கிறார் ஒரு பின்னோட்டத்தை.

அவர் யாராக இருந்தாலும் என்னுடைய குரல் அவருக்கு, தயவு செய்து நீங்கள் சொல்கின்ற கருத்தை கண்ணியமாக, உங்கள் பெயரில் வந்து சொல்லுங்கள். அது தான் உங்களுக்கு அங்கிகாரத்தைய் கொடுக்கும்.

பாலசந்தர் கணேசன். said...

போலியான டோண்டு மற்றும் போலியான பாலசந்தர் கணேசன் அவர்களே,
உங்களுக்கு என்ன குறிக்கோள்?.
தைரியமாக உங்கள் கருத்துக்களை உங்கள் பெயரில் சொல்ல என்ன தயக்கம்?அப்போது உங்கள் கருத்துக்கு அங்கிகாரம் கிடைக்கும். உங்கள் போலி "முகமுடி"யை விட்டு விட்டு வெளியே வாருங்கள்...

Anonymous said...

என்னுடைய பின்னூட்டத்தினை ஏண் நீக்கினீர்கள் பால்சந்தர்? நீயும் அந்த பாப்பார நாயிங்களுக்கு கொட்டை தாங்குறியா?

Anonymous said...

டோண்டு தேவ்டியா புள்ள கூற்றுப்படி பார்த்தால்...


பறையன் மகன் தப்பு அடிக்கனும்

பள்ளன் மகன்மாட்டை திங்கனும்

ஆசாரி மகன் மரம் வெட்டனும்

பாப்பான் மகன் மணியாட்டனும்...


அப்டின்னா வேசி மகன்???

Anonymous said...

hai

Anonymous said...

the great acharya closed more than 6000 schools in tamilnadu during his regime. It was kamarajar who reopened them. In fact he opened more schools so that almost everyone was able to get some basic education.