Saturday, January 21, 2006

சொன்னாலும் சொல்வார்கள்.

1. கங்குலியை நீக்குவது மிக கடினமாக இருந்தது. ஆனால் அவருடன் ஆடுவது அதை காட்டிலும் கடினமாக இருக்கிறது.- டிராவிட்
2. கங்குலியை அணியில் இருந்து ஒரேடியாக நீக்குவதை விட, இவ்வாறு நடத்துவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.-சாப்பல்
3. கலைஞர் நம்ப வைத்து துரோகம் செய்பவர். கடைசியில் காலை வாரி விடுபவர். எனவே தான் நாங்கள் அவருடன் சேர்ந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டோம்.- நாஞ்சில் சம்பத்.
4. தி.மு.க வுக்கும் சன் டிவிக்கு எந்த தொடர்பும் இல்லை. அதனால் தான் அதற்கு ஏதாவது பிரச்சினை வந்தால் நானும் மாறனும் சென்று கவர்னரை சந்திப்போம்- கருணாநிதி.
5. அரசு ஊழியர்கள் நலம் விரும்பும் அரசு இது. அதனால் தான் 90 சதவிகிதம் வருமானம் ஊழியர்களுக்கே போகின்றது என்று குற்றம் சாட்டிய நாஙகள் இன்று அதை இன்னும் கூட்டியிருக்கிறோம்.- ஜெயலலிதா.
6. நான் ஆட்சிக்கு வந்தால் மக்கள் வீடு தேடி இட்லி,தோசை எல்லாம் வரும் -விஜயகாந்த்.
7. எல்லா தொகுதியிலும் நான்கு வேட்பாளர்களை நிறுத்தும் பலம் பா.ஜ.க வுக்கு உள்ளது- பொன்.இராத கிருஷ்ணன்.
8. என்னுடைய அடுத்த படத்தில் ஐஷ்வர்யா ராய் கிடைக்காவிட்டால் அவருடைய அம்மா கதாநாயகி- ரஜினி.
9. என்னுடைய அடுத்த படத்தின் பெயர் - மன்னாதி மன்னன். இதில் நான் என் பையன் இரண்டு பேரும் நடிக்கிறோம். இரண்டு பேருக்கும் ஜோடி நமீதா.

10. தமிழ் சினிமா புத்திசாலிகளே இல்லை. எல்லாரும் கோமாளிகள். இவர்களை பார்த்து தினமும் விழுந்து விழுந்து சிரிப்பதே எங்கள் வேலை- கேரள சினிமா நடிகைகள்.

No comments: