தமிழ்மணத்தின் அறிவிப்பு ஆச்சரியத்தை தரவில்லை. தொந்தரவுகளுக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்க நினைக்கிறார்கள். இது போலிகளை சற்றே வலிவிழக்க செய்யும். ஆனால் ஒன்று நாம் நினைவில் வைக்க வேண்டும். பின்னூட்டங்கள் வெளியாவது சற்றே தாமதமாகலாம். இது விறுவிறுப்பை குறைக்கும். இது ஒரு அசௌரியமாக முடியும்.
என்ன செய்தாலும் போலிகள் மாற்று வழிகள் , பாதைகள் கண்டுபிடித்து கொண்டே தான் இருப்பார்கள்.ஆனால் பின்னூட்டத்தை சரிபார்த்த பின்னர் மட்டுமே வெளியிடுவது இதற்கு ஒரு பின்னூட்ட அளவில் கட்டு படுத்தலை வெற்றிகரமாக கொண்டு வரும்.
டோண்டு இதற்கு பாராட்டு தெரிவித்தது எதிர்பார்த்தது. அவர் இதனால் மிக கடுமையாகவே தொந்தரவு செய்யபட்டவர். எனக்கும் அவர் இந்த கட்டுபாடுகளை செய்ய சொல்லி பல முறை அறிவுரை சொல்லி உள்ளார்.
இனிமேல் போலிகள் தங்கள் முகமூடிகளை கலைந்து விட்டு, ஆபாசமான வார்த்தைகளை விட்டு விட்டு மற்றவர்கள் போல தனி பதிவுகள்,பின்னோட்டங்கள் இட வேண்டிய கட்டாயம் வந்து விட்டது.எனவே இந்த அறிவிப்பு பதிவர்களுக்கு அசௌரியமாக இருப்பினும் போலிகளின் சுதந்திரத்திற்கு வேலி அமைத்துள்ளது.
8 comments:
//மற்றவர்கள் போல தனி பதிவுகள்,பின்னோட்டங்கள் இட வேண்டிய கட்டாயம் வந்து விட்டது//
என்னைய்யா சொல்ல வர்றீங்க?
கடற்புரத்தான் அவர்களே,
போலிகள் இனிமேல் போலியாக இருக்க முடியாது.
//போலிகள் இனிமேல் போலியாக இருக்க முடியாது//
இதுக்கு நீங்க முதல்ல சொன்னதே பரவாயில்ல போலிருக்கு.
இப்போ என்ன சொல்லுறீங்க ? போலிகள் இனிமே நிஜமாகவே இருக்க முடியும்ணா?
அண்ணா,இப்போது தமிழ்மணத்தில் வந்திருக்கும் கட்டுப்பாடு பின்னூட்டங்களை பதிவின் அதிபரின் அனுமதியோடு மட்டுமே வெளியிட அறிவுறுத்துகிறது (நீங்க ஏற்கனவே பண்ணிட்டீங்க ..ஒத்துக்குறேன்) .இதுல போலிய பின்னூட்டமிடாம தடுக்க முடியாது ஐயா! ஆனா அது வெளிவராம நீங்க கவனமா இருந்தா தடுக்கலாம். சரியா?
இதுல என்னங்க "மற்றவர்கள் போல தனி பதிவுகள்,பின்னோட்டங்கள் இட வேண்டிய கட்டாயம் வந்து விட்டது"..என்னமோ போங்க.
கடற்புரத்தான் அவர்களே...,
இப்போது கட்டுபாடுகள் வந்து விட்டதால், போலி டோண்டு அவர்கள் , தன்னுடைய சொந்த பெயரில் நாகரிமான முறையில் பின்னூட்டம் இட்டாலே அது பதிப்பிக்க படும். எனவே அவர் டோண்டுவின் பெயரில் போலியாக சுத்த முடியாது.
ada...ungkalukku comments ellaam kUda varuthaa...aachchariyam thaan....
உங்களுக்கு புரிய வைக்குறதுக்குள்ளால விடிஞ்சுரும் போல இருக்கு.
ஜோ, உங்களுக்கு வேற வேலை இல்லைன்னா என் பதிவுகளைப் படிச்சு பின்னூட்டம் போடுங்க. :-)
என்ன குமரன்,
பின்னூட்ட கேன்வாசிங்கா.. அதுக்கும் தடை வந்தாலும் வந்துரும். ஜாக்கிரதை..
பாலசந்தர்..
இது ஜோவுக்கு குமரன் சொன்னதுக்கு பதில். மாடரேட் பண்றேன்னுட்டு ரிஜெக்ட பண்ணிராதீங்க..
ஜோ.. கலக்குறீங்க.. பாரதியார் வேஷமுல்ல போட்டிருக்கீங்க?
Post a Comment