Monday, January 02, 2006

பங்க்சு பார்ட்டியும் தமிழக தலைவர்களும்

பங்க்சு பார்ட்டி நண்பர்கள் இந்த வி.ஐ.பி க்களை சந்திக்கிறார்கள். முதலில் ராமதாசு அவர்கள்.
பங்க்சு: ஐயா,வணக்கம், ஓண்ணும் ஓண்ணும் ரெண்டுல உங்கள பத்தி எழுதினேன். படிச்சிங்களா?.
ராமதாசு: எந்த பத்திரிக்கையையும் நம்பி நான் இல்ல. (தொண்டர்களை பார்த்து) இனிமே,இந்த பத்திரிக்கை படிக்காதிங்க...
பங்க்சு: தலைவர்கள் எல்லாம் தொண்டர்களுக்கு நல்லது செய்வாங்க. ஆனா நம்மூர்ல மட்டும் தான் இதை படிக்காத , அதை படிக்காத அப்படின்னு அறிவுரை(?) சொல்றிங்களே ஏன்?
ராமதாசு: எல்லாரும் படிச்சுட்டா, என் பேரன், பேத்தி எல்லாம் மத்திய மந்திரி ஆக முடியாது.
பங்க்சு: ஐயா சூப்பருங்க!!, உங்களுக்கு இருக்கிற விஷனே தனி. ஏன் ஐயா சினிமா காரங்களை தாக்குறீங்க?
ராமதாசு: நாளைக்கு தேவப்படும்போது கலாட்ட பண்ண தெரியனும். அதுக்கான ட்ரைனிங் தான் இந்த ஸ்டண்ட்.
பங்க்சு: அப்படின்னா மக்கள் நலனுக்கு 2006 ல எதுவும் திட்டம் உண்டா?
ராமதாசு: இந்த தடவை தி.மு.க, அ.தி.மு.க ரெண்டு பேரோடையும் கூட்டணி வைக்கலாம்னு இருக்கேன். இங்க ஒரு 30, அங்க ஒரு 30, யாரு ஜெயித்தாலும் 6 மந்திரி பதவி. இது தான் ரேட்.
பங்க்சு: சூப்பர்யா, உங்களுக்கு எதிர்காலம் பிரமாதம்.

அடுத்து ஜெயலலிதா,


பங்க்சு: அம்மா, உதவிதொகை அளிக்கிறேன்னு ஒரு 50 பேரை போட்டு தள்ளிடிங்களே?
ஜெயலலிதா:உதவிதொகை கொடுத்து நான் பேர் வாங்கிருவேன்னு, கருணாநிதி 50 பொணத்தை கொண்டு வந்து போட்டுடார். ஜெயா TV பார்த்தா உண்மை தெரியும்.
பங்க்சு:பொறுப்பான பதில். அடுத்து என்ன இலவச திட்டம் வைச்சுருக்கிங்க?ஜெயலலிதா: மக்கள் இனிமே எந்த கடையிலும்போய் எதை வேணும்னாலும் எடுத்துக்கலாம்னு ஒரு திட்டம் வருகிறது.
பங்க்சு: நன்றிம்மா, நன்றி


அடுத்த படியாக கருணாநிதி.
பங்க்சு: ஐயா வணக்கம்.கருணாநிதி: பேரன்பு மிக்க உடன்பிறப்பே, இப்படி வெறுங்கையோடு வந்திருக்கிறாயா?

பங்க்சு: ஐயா புத்தாண்டு வாழ்த்துக்களோடு தான் வந்திருக்கிறேன்.

கருணாநிதி: அது யாருக்கு வேணும்? எனக்கு நிதி தான் வேணும்.

பங்க்சு: ஐயா, புத்தகம், முரசொலி,சினிமா கதை வசனம் எழுதி தமிழனை கொல்றது மட்டுமில்லாமல்,பில் கேட்சுக்கும் புத்தகம் கொடுத்திட்டங்களே,
கருணாநிதி: ஆமாம். விக்காத ரெண்டு புக்க அவருக்கு கொடுத்தேன். காசு நிறைய கொடுப்பார்னு பார்த்தேன். பெரிய பணக்காரர்னு சொன்னாங்க... ஆனா அவரு ஒண்ணும் கொடுக்காம போயிட்டார்.பில் கேட்சு சந்திப்பு பற்றி புத்தகம் எழுதி காசு பாக்கணும்
பங்க்சு: ஐயா, எனக்கு ஏதாவது அன்பளிப்பு உண்டா?

கருணாநிதி: என்னுடைய நெஞ்சத்தில் இடம் கொடுக்கிறேன்.
அடுத்த படியாக வைகோ.பங்க்சு:வைகோ அவர்களே வணக்கம்.
வைகோ: பொறுதடக்கை வாளெங்கே, மணிமார்பெங்கே,பறுவயிரத்தோளெங்கே என்று கேட்டவளை கலிங்கத்து பரணியில் பார்த்திருப்பீர்கள். அத்தகைய தோள்களை நான் பங்க்சு பார்ட்டி நண்பர்களிடம் காண்கிறேன்.
பங்க்சு: கலைஞர பார்த்தாலே கட்டி பிடிச்சு அழுகிறிங்களே ஏன்?
வைகோ: எனக்கும் அவருக்கும் உள்ள நட்பு தேர்தல் வரும் போது மட்டும் தான் பிரியும். மற்ற எப்பவும் மாறாதது.
பங்க்சு: இலஙகை தமிழனுக்குன்னு மீண்டும் குரல் கொடுக்கிறீர்களே, தமிழக தமிழன் ஏன் மறந்து விட்டீர்கள்.
வைகோ: இலஙகை தமிழன் காசு கொடுக்கிறான். நம்மூர் தமிழனுக்கு குரல் கொடுத்தா பிரயோஜனம் இல்லை.
பங்க்சு: சூப்பர் வைகோ அவர்களே

11 comments:

குழலி / Kuzhali said...
This comment has been removed by a blog administrator.
பாலசந்தர் கணேசன். said...

இல்லை. குழலி அவர்களே,
19 பேர் ராஜீவ் காந்தி அவர்களோடு சேர்த்து படுகொலை செய்யப் பட்டதை மறந்து
வைகோ விடுதலை புலிகளை விடாமல் ஆதரிக்கும் காரணம் என்ன?. இலங்கை தமிழர்கள் உணர்வு அறிந்தவன் நான். இங்கும் அவர்களோடு தினந்தொறும் பேசுகிறென். வைகோ ஆதரிப்பது தீவிர வாத உணர்வே, அதனால் தான் கிண்டல் அடித்தேன்.

இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்பதிலும், தமிழர்கள் நாடு திரும்ப வேண்டும் என்பதிலும் எனக்கும் நிறைய உண்டு.

நீங்கள் என்னுடைய முந்தைய கட்டுரை படியுங்கள்.

http://bunksparty.blogspot.com/2005/12/blog-post_30.html

அதில் உங்களை போன்றவர்கள் பற்றியே எழுதி உள்ளேன்

குழலி / Kuzhali said...

தற்போது தான் படித்தேன் நீங்கள் சுட்டிய அந்த சுட்டியை அது உங்கள் கணிப்பு அது பற்றி தற்போதைக்கு விமர்சிக்கும் எண்ணமில்லை


//பங்க்சு: இலஙகை தமிழனுக்குன்னு மீண்டும் குரல் கொடுக்கிறீர்களே, தமிழக தமிழன் ஏன் மறந்து விட்டீர்கள்.
வைகோ: இலஙகை தமிழன் காசு கொடுக்கிறான். நம்மூர் தமிழனுக்கு குரல் கொடுத்தா பிரயோஜனம் இல்லை.
//
இதிலே விடுதலை புலி என்று வருகின்றதா? இல்லையே!

ஈழத்தமிழர் பிரச்சினையை பேச்சுவார்த்தையை இலங்கை அரசு யாருடன் பேசுகின்றது புலிகளிடம் தானே?!

கொச்சைபடுத்தாதீர்கள்....

இதை பற்றி மேலும் பேசுவது அலுப்பூட்டும் விடயம், உண்மையிலேயே தகவலுக்காக வேண்டுமெனில் நீங்கள் தமிழ்சசி,மற்றும் சிலரின் சமீபத்திய ஈழம் பற்றிய பதிவுகளை படித்து பாருங்கள்....

வைகோ பற்றிய அந்த வரிகளை உங்கள் பதிவிலிருந்து நீக்காமல் என் பின்னூட்டத்தை நீக்கியதால் அதே பின்னூட்டத்தை என் பதிவில் இடும்நிலை ஏற்பட்டுள்ளது என்பதையும் தெரிவிக்கின்றேன்...

நன்றி

doondu said...

எனக்கு பார்ப்பன தலைவர்களை மட்டுமே பிடிக்கும்.

கருணாநிதி, ராமதாசு, திருமா போன்றவர்களைப் பிடிக்காது.

குழலி / Kuzhali said...

நீக்கப்பட்ட என் முதல் பின்னூட்டம் என்னுடைய பதிவில்....

http://kuzhali.blogspot.com/2005/12/blog-post_28.html#c113625966442103144

பாலசந்தர் கணேசன். said...

குழலி அவர்களே...

உங்களுடைய எழுத்துக்களை விரும்பி படிக்கின்ற நபர்களில் நானும் ஒருவன்.
உங்களுக்கு எப்படி கருத்து சொல்ல விருப்பம் உள்ளதோ , அதை போன்று எனக்கு அதை நிராகரிக்கும் உரிமை உண்டு என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

உங்கள் கருத்தை உங்கள் ப்லொகில் பதிவு செய்வது பற்றி நான் என்ன சொல்ல?
இலஙகை தமிழர்கள் என்ற பெயரில் வைகோ விடுதலை புலிகளை மற்றுமே தான் ஆதரிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. கருணாவை அவர் ஆதரிப்பாரா?
அல்லது மற்ற தமிழர் குழுக்களை ஆதரிப்பாரா? . மற்ற தமிழின இயக்கத்தை சேர்ந்தவர்கள் விடுதலை புலிகளினால் கொல்லப் படுவதை பற்றீ அவர் மொளனம் சாதிப்பது ஏன்?.

என்னுடைய ப்லாகிற்கு வருகை தந்தமைக்கு நன்றி. நான் நியாயமாக , எனக்கு சரியென்று பட்டதையே எழுதிகிறேன்.

குழலி / Kuzhali said...

//உங்களுடைய எழுத்துக்களை விரும்பி படிக்கின்ற நபர்களில் நானும் ஒருவன்.
//
மிக்க நன்றி

//உங்களுக்கு எப்படி கருத்து சொல்ல விருப்பம் உள்ளதோ , அதை போன்று எனக்கு அதை நிராகரிக்கும் உரிமை உண்டு என்பதை நீங்கள் உணர்வீர்கள்.
//
அதனால் தான் நான் அதை என் பதிவில் பதிந்தேன்...

தற்போதும் வைகோவின் விடுதலைபுலிகள் ஆதரவு எதிர்ப்பு பற்றி எமக்கு கவலையில்லை ஆனால் வைகோ இலங்கைபிரச்சினை பற்றி பேசுவதே அவர்களிடம் காசு வாங்கிக்கொண்டு தான் என்பது போன்ற கொச்சை படுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றேன், இப்போது நான் பேசினால் நானும் புலிகளிடம் காசு வாங்கிக்கொண்டு பேசுகிறேன் என்பீர்களா? இங்கே ஈழம் பற்றி பேசும் அனைவரும் புலிகளிடம் காசு வாங்கியவர்களா? போங்க சார்...

குழலி / Kuzhali said...

தற்போதுதான் என் பதிவில் உங்கள் பின்னூட்டம் கண்டேன்
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி பாலச்சந்தர் கணேசன்.... கருத்து வேறுபாடில்லாமல் வாழ்க்கையே இல்லையே...அதையும் தாண்டி எப்போதும் நட்பாகவே இருப்போம்...

பாலசந்தர் கணேசன். said...

சிங்களவர்கள் தமிழர்களுக்கு சம உரிமை கொடுக்க வேண்டும் என்று கூறும் விடுதலை புலிகள், மற்ற தமிழக போராளிகளுக்கு அந்த உரிமையை கொடுக்காதது ஏன்

பாலசந்தர் கணேசன். said...

நன்றி குழலி அவர்களே,

ஆதரிப்பவர்கள் எல்லாரும் காசு வாங்கி விட்டு ஆதரிவிப்பவர்கள் என்று ஒரு பொழுதும் கூறவில்லை. கூறவும் மாட்டேன்.

ஆனால் காசு வாங்கி விட்டு ஆதரிப்பவர்களும் உண்டு, காசுக்காகவே ஆதரிப்பவர்களும் உண்டு. இதை நீங்கள் மறுக்க முடியுமா?

காசு வாங்கி விட்டு ஓட்டு போட்டார் என்று ஒருவரை நான் குற்றம் சாட்டினால் , வோட்டு போட்டவர்கள் எல்லாம் காசு வாங்கி விட்டு போட்டார்கள் என்று கூறுவதாக நீஙள் அர்ட்தம் செய்ய கூடாது.

பாலசந்தர் கணேசன். said...

போலியான டோண்டு அவர்களே!!!!
இதை தயவு செய்து நிறுத்துங்கள்