Thursday, January 19, 2006

தமிழ்மண அனுபவங்கள்.

நான் ப்லாகை துவங்கி வெகு நாட்கள் ஆகிய போதும் , தமிழில் எழுத ஆரம்பித்தது சில காலத்திற்கு முன்பு மட்டுமே.

1.என்னுடைய பதிவுகளை பற்றிய மற்றவர்கள் கருத்து சொல்வது , பின்னோட்டம் இடுவது கலந்துரையாடலுக்கு இணையாக உள்ளது.

2. பதிவுகளின் அளவு பற்றி பல்வேறு கருத்துக்கள் உள்ளன. ஜோ கடுமையாக எதிர்த்தாலும் அதை பாராட்டுபவர்களும் இருக்கிறார்கள். பதிவு பல பக்கங்கள் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் ஜோ சொல்லி காட்டியது இது இல்லை. அதை நான் நன்றாக புரிந்து கொண்டேன். ஜோ சுருக்கமாக இருந்தாலும் சரக்கு இருக்க வேண்டும் என்று கூறுவது நியாயமே. பதிவுகள் பல வடிவங்களில் இருக்கலாம் என்பது அவர் உணர வேண்டும்.

3. எதிர்பாராதது போலி டோண்டுவின் அறிமுகம். அவர் எனது ப்லாகில் பின்னோட்டம் இட்டது எனக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது.

4. கசப்பானது இணையத்தில் நடக்கும் ஜாதி சண்டை. ஜாதியை சமுகம் நீர் ஊற்றி வளர்க்கிறது. அதனால் தான் அதன் முள்கள் இணையம் வரை தொடர்கின்றன.

5. மிக பெரிய மகிழ்ச்சி : பல்வேறு திசைகளிலும் பதிவாளர்கள் தமிழை எடுத்து செல்வது. சினிமா, பத்திரிக்கை, மீடியா என்று அனைவரும் தமிழை சீரழிக்கும் போது, பதிவாளர்கள் தமிழ் காக்க வந்த் இரட்சகர்களகாவே தெரிகிறார்கள்.

7 comments:

நாமக்கல் சிபி said...

நீங்கள் கூறியிருக்கும் கருத்துக்கள் அத்தனைஉம் உண்மை.

இட்டாலி வடை said...

// மற்றுமே// அல்ல மட்டுமே.

நீங்க சொன்னாதுல அது மட்டும் சரியா இல்லீங்க

சிங். செயகுமார். said...

"5. மிக பெரிய மகிழ்ச்சி : பல்வேறு திசைகளிலும் பதிவாளர்கள் தமிழை எடுத்து செல்வது. சினிமா, பத்திரிக்கை, மீடியா என்று அனைவரும் தமிழை சீரழிக்கும் போது, பதிவாளர்கள் தமிழ் காக்க வந்த் இரட்சகர்களகாவே தெரிகிறார்கள்"



"எக்கசக்கமான தமிழர்களின் ப்லொகுகளை தமிழ்மணத்தில் காண முடிகிறது. காசிக்கு மிக்க நன்றி. அதையும் தாண்டி மற்றும் சில் நல்ல வெப்சைட்டுகளை வெளி கொணர்வதே இந்த பதிவின் நோக்கம்.அனைத்து தமிழ்மண நண்பர்களே, வாருங்கள் ...
உங்களுக்கு தெரிந்த வெப்சைட் முக்வரி கூறுங்கள். இந்த பதிவினை நான் தொடர்ந்து புதிப்பித்து கொண்டு இருப்பேன்.

செய்திகள்.
www.thatstamil.com
www.dinamalar.com

பத்திரிக்கைகள்
www.vikatan.com
www.kumudam.com

கட்சிகள்
www.thedmk.org

சினிமா
www.cinesouth.com
www.tamilcinema.com"


வரவர குமுதம், விகடன் இரண்டும் விஷயமே இல்லாத வெற்று பத்திரிக்கைகள் ஆகிவிட்டன. சரியாகசொல்ல போனால் குமுதம் குப்பையாகி வெகு நாளாகி விட்டது. விகடன் அந்த வரிசையில் இப்போது சேர்ந்து விட்டது. தமிழில் வேறு நல்ல பத்திரிக்கைகள் இல்லாத நிலையில் விகடனும் சோரம் போனது எனக்கு மிகுந்த வருத்தம்.
1. தொடர்கதைகள் காணமல் போனது ஏன்?. நல்ல கதைகள் வந்தால் மக்கள் கண்டிப்பாக படிப்பார்கள்.2. ஒரு சில பக்கங்களே இரண்டு பத்திரிக்கைகளிலும் தேறுகின்றன.
உண்மையில் சொல்ல போனால் இப்போது நான் தமிழ்மண ப்லொகுகள் படிப்பதை நிறையவே விரும்ப்புகிறேன். தமிழ் பத்திரிக்கைகள் சரக்கு காலியாகி விட்டதா?"

நண்பரே நீங்க என்ன சொல்ல வாரீங்க! சொந்தமா எதுவும் கருத்துக்கள் சொன்னா நல்லா இருக்கும் ,அடுத்தவர் புராணம் பாடுவதைவிட வருகின்ற பதிவில் உங்கள் திறமையை எதிர் பார்க்கின்றேன்.

பாலசந்தர் கணேசன். said...

நான் அடுத்தவரை பாராட்டினால் ஏனிந்த கோபம். என்னுடைய மற்ற பதிவுகள் நீங்கள் காண மறுப்பதேன் என்று யோசித்தேன். உங்கள் தனி நபர் குறிப்பை பார்த்தால் நீங்கள் இதை தான் எழுதியிருக்கீறிர்கள் உங்களை பற்றி...

"
நான்கு சுற்று சுற்றினாலே களிமண் கூட அழகாகிறது குயவனின் கைகளில்! இத்தனை சுற்றுக்கள் சுற்றியும் பூமியில் நான் மட்டும் களிமண்ணாய் .............. "

பாலசந்தர் கணேசன். said...

அவசரமாக எழுதி சரி பார்க்காமல் பதிவை வெளியிடுவதால் வந்த எழுத்து பிழைகளுக்கு மன்னிப்பு கோருகிறேன். உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.

ஐயர் said...

உங்கள் தமிழ்கோமண அனுபவங்களை ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லுங்கள் பாலசந்தர் கணேசன். காத்திருக்கிறோம்.

பாலசந்தர் கணேசன். said...

கோமணம்- என்றால் கோவின் மணம்... பசுவின் மனம். தமிழ் கோமணம் என்றால் தமிழ் பசுவின் மணம். ஆனாம் எல்லா பசுவுக்கும் என்ன மணம் உண்டோ , அது தான் தமிழ் பசுவுக்கும் உண்டு.இது தான் தமிழ்கோமணம் பற்றிய அனுபவம்.