Tuesday, January 17, 2006

ட்ராவிடும் சேவாகும் தொடர்ந்து துவக்க ஆட்டம் ஆடலாமா?

என்னுடைய பதில் ஆம். இதை மறுத்து கூறுபவர்கள் ஒன்றை ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும். சேவாக் கூட ஒரு ஆரம்பகால துவக்க ஆட்டகாரர் அல்ல. மிடில் ஆர்டர் பேட்ஸ்மன் மட்டுமே. அவரை நீக்க டீமுக்கு மனமில்லாததாலும் துவக்க ஆட்டகாரர்கள் இல்லாதாலும் அவர் துவக்க ஆட்டகாரராக அனுப்ப பட்டார். தொடர்ந்து வெற்றி கொடி நாட்டினார். சேவாக் துவக்க ஆட்டகாராரக அனுப்ப பட்ட போது அது கடுமையாக விமர்சிக்க பட்டது. அது இந்தியா சேவாக் இருவருக்கும் நல்லதல்ல என்றெ கூறப்பட்டது. ஆனால் சேவாக் அனைத்தையும் தவிடு பொடியாக்கினார்.
நல்ல துவக்க ஆட்டகாரர்கள் கிடைக்காத பட்சத்தில் திராவிட் ஆட்டத்தை துவங்கினால் என்ன?. தொடர்ச்சியாக ஆட்டத்தை துவக்கினால் அவர் அதில் வெற்றி பெறுவார் என்றே நான் கருதுகிறேன். இது நம்முடைய அணிக்கும் மேலும் ஒரு பேட்ஸ்மன் அல்லது பந்து வீச்சாளரை கொண்டு வர உதவியாக இருக்கும். எனவே இது தொடரவேண்டும்.
துவக்க ஆட்டகாரராக களமிறங்கிய திராவிடுக்கு ஜே...

2 comments:

நாமக்கல் சிபி said...

டிராவிட் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கியது க்ரேக் செப்பலின் பரீட்சார்த்தமான முயற்சியே என்று நான் எண்ணுகிறேன். தவிர எதிரணியினரின் திட்டமிட்ட வியூகங்களை தவிடுபொடியாக்குவது
க்ரேக் செப்பலின் டெக்னிக். யார் கண்டது அடுத்த டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் கூட ஆட்டத்தை துவக்க வாய்ப்பு இருக்கிறது நண்பரே.

Anonymous said...

இப்படியான அடித்தாட இலகுவான மைதானத்தில் கங்குலிக்குச் சந்தர்ப்பம் கொடுத்து அவரை நல்ல ஓட்டங்கள் பெறவைத்து அவரின பேரைக் காப்பாற்றியிருக்கலாம்.

அந்த மைதானம் சில வீரர்கள் தங்கள் வாழ்நாள் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த நன்கு உதவியது.