Monday, January 23, 2006

அளவும் எண்ணிக்கையும்...

எனக்கு இடபடுகிற பின்னோட்டங்கள் இரண்டு கருத்துக்களை தெரிவிக்கின்றன.
ஒன்று பதிவுகளின் அளவு. இதை பற்றி கடற்புரத்தான் ஜோ குறிப்பிட்டார்.(ஒரு சில பதிவுகளை தவிர, மற்ற பதிவுகளுக்கு இது பொருந்தாது என்றே நான் கருதுகிறேன்.) ஒரு தலைப்பில் நான் சொல்ல விரும்பிய கருத்தை சொல்லி விட்டால் பதிவு முழு பெற்று விடுகிறது என்பது என்னுடைய நடை.

அடுத்த படியாக எண்ணிக்கை. அதிகமான பதிவுகளை எழுதியிருக்கிறேன் , மற்றவர்கள் பின்னூட்டங்கள் இடும் அளவிற்கு என்பது. எண்ணிக்கை என்பது நபருக்கு நபர் மாறுபடத்தான் செய்யும்.

இந்த மாதிரியான கருத்துக்களை நேர் கொள்வது எனக்கு எளிதாகவே உள்ளது. பதிவுகள் எனக்கு திருப்திகரமாக உள்ளதா என்பது ஒரு கேள்வி. மற்றொன்று நமது பதிவுகளை படிப்பவர்களிடம் என்ன அதிர்வுகளை அல்லது தாக்கத்தை உண்டு பண்ணுகிறது.

என்ன நோக்கத்தோடு ஓவ்வொரு பதிவையும் நாம் எழுதுகிறோம் அதை படிப்பவர்கள் புரிந்து கொள்கிறார்களா, ஏற்று கொள்கிறார்களா,மறுப்பவர்கள் கூறும் காரணம் என்ன,அது நமக்கு சரியென படுகிறதா என்பவை மிக ஆழமாக கவனிக்க பட வேண்டியவை.

நான் மிகவும் உணர்வு பூர்வமாக எழுதிய "சுதந்திர நாட்டின் அடிமை மக்கள்" மிக குறைந்த பின்னோட்டங்களையே பெற்றது. நான் விளையாட்டுக்காக எழுதிய "சொன்னாலும் சொல்வார்கள்","கேட்க கூடாத கேள்விகள்" போன்றவை அதிக பின்னூட்டங்கள் மற்றும் மெயில் பாராட்டுக்களை பெற்று தந்தன.

ஒவ்வொரு பதிவும் ஒரு சின்ன தூண்டலினாலேயே எழுத பட்டது. அதை படிப்பவர்களுக்கும் ஒரு தூண்டலை உண்டாக்கினால் பின்னூட்டங்கள் கிடைக்கலாம். நான் நிறைய பதிவுகளை படித்தாலும் பின்னூட்டம் கொடுப்பது என்பது மிக குறைவு. அதனால் படித்தது இரசிக்க படவில்லை என்றோ, பாதிக்கவில்லையென்றொ அர்த்தமாகாது. சில பின்னூட்டங்கள் ஜாதி சண்டையினால் வருபவை. இணையத்தில் பதிவர்களிடையே ஜாதி சண்டை (மிக சிறிய அளவில் இருந்தாலும் )எனக்கு அதிர்ச்சியாகவே இருக்கிறது.

ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு உண்மையில் பொழுது போக்காக துவங்க பட்டது. அது இப்போதும் அவ்வாறே தொடர்கிறது. விமர்சித்த ஜோ,அப்பாவி ஆறுமுகம்,ஜிகிடி, மகேஸ்,செல்வன், கிறுக்கன் அனைவருக்கும் நன்றி.

No comments: