Saturday, January 28, 2006

அரசு கேபிள் தொழிலை எடுத்து கொள்வது

அரசியல் காரணத்திற்காக செய்ய பட்டாலும் அரசு கேபிள் தொழிலை எடுத்து கொள்வது நல்லதையே செய்யும். தற்போது கேபிள் தொழிலில் ஒரு கட்டுபாடு, ஒழுங்கு என்பது சுத்தமாக இல்லாமல் போய் விட்டது. இவர்கள் வைப்பது தான் கட்டணம், இவர்கள் கட்டுவது தான் வரி என்று சுத்தமாக கன்ஸ்யூமர் நலன் மறைந்து போய் விட்டது.
அதே போன்று பே-சானல்கள் கூத்து போன்றவையும் மறையும். பே-சானல்கள் அரசிடம் விளையாடுமா என்பது சந்தேகமே. ஒரு நல்ல சானல் மற்றும் 10 டப்பா சானல் என்று அனைத்தையும் மிக்ஸ் செய்து ஒரு தொகுப்பாக சானல்கள் வழங்குவது நிற்கும். செட்- டாப் டப்பாக்கள் அடுத்த படியாக அறிமுக படுத்த படலாம். இதுவும் நல்லதே. மொத்தமாக 4 தமிழ் சானல்கள்,3 ஸ்போர்ட்ஸ் சானல்கள் மட்டும் எடுத்து கொள்ள இது வழி வகுக்கும்.
கேபிளுக்கு மாதம் 50 மட்டுமே கட்ட வேண்டி வந்தால் அது நன்மையே தரும்.

4 comments:

Unknown said...

இதை ஏன் சார் ஆன்மிகம்,இலக்கியம் பிரிவில் போட்டிங்க?கேபிள் டீவியை அரசு எடுத்துக்கொள்வதற்கும் ஆன்மிகத்துக்கும் என்ன சம்பந்தம்?

குமரன் (Kumaran) said...

ஒருவேளை இலக்கியத்துக்குச் சம்பந்தமோ?

Santhosh said...

பாலச்சந்தர்,
நான் உங்க கருத்தை ஒத்துப்போகவில்லை. அரசின வேலை ஆட்சி செய்வதுதான் தொழில் செய்வது இல்லை. கண்டிப்பாக இவங்க ஆரம்பித்து இருக்கின்ற அனைத்து தொழிலகளும் கண்டிப்பாக ஊழல்களுக்கு உள்ளாகும், சேவையை எடுத்துக்கொண்டால் கண்டிப்பாக அரசாக ஊழியர்களின் சேவை என்ன என்பது உங்களுக்கே தெரியும்.

Vaa.Manikandan said...

அரசு கேபிள் தொழிலை எடுத்து கொள்வத--
arasiyal,pazivaangal thavira veRu onRum illai.

isn't it?